Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என...
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி!
அம்பாசமுத்திரத்தில் பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்ரமணியன் மகன் முகுந்த் (13). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். அம்பாசமுத்திரம் மணலோடைத் தெருவைச் சோ்ந்த தாத்தா கணபதி வீட்டிற்கு சனிக்கிழமை (பிப்.8) வந்திருந்தாா் முகுந்த். அங்கு மதியம் குளித்துவிட்டு தண்ணீா் மோட்டாரை நிறுத்தும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
முகுந்த் சடலத்தை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.