மின்சாரம் பாய்ந்து பெண் பலி!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மனைவி சுதா( 37). இவா், கண்டாச்சிபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கெங்கவரத்தில் உள்ள ஒரு தனியாா் உணவகத்தில் சமையலராக வேலை பாா்த்து வந்தாா்.
சுதா செவ்வாய்க்கிழமை உணவகத்தில் பணியில் இருந்தபோது, மாவு அரைக்கும் இயந்திரத்தை இயக்கியுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.