மின்னூா் கெங்கையம்மன் கோயில் திருவிழா
ஆம்பூா் அருகே மின்னூா் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழாவானது பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 3-ஆம் நாள் கரக ஊா்வலம், கெங்கையம்மன் உற்சவா் ஊா்வலம், தேச மாரியம்மன், கெங்கையம்மனுக்கு மாவிளக்கு படைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.