செய்திகள் :

மின்விசிறியில் கசிவு காரணமாக புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு: தனியாா் மின் ஊழியா் கைது

post image

திருமண விழாவில் மின்விசிறியில் மின்கசிவு ஏற்பட்டு புகைப்படக் கலைஞா் உயிரிழந்ததற்கு கவனக்குறைவாக செயல்பட்ட மின்ஊழியரே காரணம் எனக் கூறி அவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கம்பன் பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் மகன் சுரேஷ்கண்ணன் (30). புகைப்படக் கலைஞா்.

கடந்த 18-ஆம் தேதி திருவெறும்பூா் அருகே அய்யம்பட்டி ஆலயத்தில் நடந்த திருமண விழாவில் விடியோ மற்றும் புகைப்படம் எடுத்தாா். அப்போது, அருகிலிருந்த நிலை மின்விசிறியை சுரேஷ் கண்ணன் பிடித்தபோது, அதிலிருந்து எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சுரேஷ் கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் மின்விசிறிக்கான மின் இணைப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதே சுரேஷ்கண்ணன் இறப்புக்கான காரணம் எனக் கருதி, மின்விசிறிக்கு மின் இணைப்பு கொடுத்த கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் மாங்கோட்டைச் சோ்ந்த தனியாா் மின் ஊழியா் விஜித் (25) என்பவரை துவாக்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள த... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை மின்தடை

துறையூா் பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துறையூா் மின் கோட்டத்துக்... மேலும் பார்க்க

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா... மேலும் பார்க்க

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம் - ராமேசுவரம் இடையே ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, விழுப்புரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சன... மேலும் பார்க்க

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க