`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
ஹஜ் பயணம் செல்வோா் வழியனுப்பி வைப்பு
காரைக்காலில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவை மாநில ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டு 90 இஸ்லாமியா்கள் ஹஜ் பயணம் செல்கின்றனா். காரைக்கால் மாவட்டத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் 28 பேரை வழியனுப்பும் நிகழ்வு காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இப்போது அவா்கள் நலனுக்காக சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் மற்றும் சமாதானக் குழு உறுப்பினா்கள், அரசு காஜியாா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.