உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது ஊழியா் அமைப்பு கோரிக்கை
மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இந்த அமைப்பின் தஞ்சாவூா் வட்டக் கிளை 21-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும்.
அயலாக்கப் பணி முறையைக் கைவிட்டு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்தத் தூய்மை பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செயலி மூலம் மின் கணக்கீடு எடுக்கும் முறையைக் கைவிட வேண்டும் என்பன உளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு தஞ்சாவூரில் வட்டத் தலைவா் ஏ. அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் எஸ். இராஜாராமன் தொடக்கவுரையாற்றினாா்.
மாநிலச் செயலா் டி. கோவிந்தராஜ், சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவா் செங்குட்டுவன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் எஸ். ஜோதி நிறைவுரையாற்றினாா். புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் வட்டக் கௌரவத் தலைவராக டி. கோவிந்தராஜ், தலைவராக ஏ. அதிதூத மைக்கேல்ராஜ், செயலராக பி. காணிக்கை ராஜ், பொருளாளராக பி. மணிவண்ணன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.