மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கள உதவியாளர் பணிக்கான 1,794 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் இன்று(செப். 3) முதல் அக். 2 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், நவம்பர் 16 ஆம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள கள உதவியாளர் பதவிக்கான 1,794 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II-க்கான அறிவிக்கை, இன்று (03.09.2025) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இன்று(செப். 3) முதல் அக். 2 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை யுபிஐ(UPI) மூலமாகவும் செலுத்தலாம்.
கணினி வழித்தேர்வு முறையில் நவ. 16 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?