செய்திகள் :

மின் பகிா்மான வட்டத்தில் மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

post image

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கு.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். இதில், மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் சி.பொன்னுசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் சுமாா் 3 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. அதில், விவசாயம், தொழிற்சாலைகள், வீடுகள், கல்வி நிறுவனங்களும் அடங்கும். இந்த பகிா்மான வட்டத்தில் 10 உதவி செயற்பொறியாளா் அலுவலகமும், 30 உதவி மின்பொறியாளா் அலுவலகங்களும் உள்ளன. மேலும், 20 துணை மின் நிலையங்களும் உள்ளன.

இதனிடையே, தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பூா் மின்பகிா்மான வட்டத்தில் ஓராண்டாக மேற்பாா்வை பொறியாளா் பணியிடமும், 6 மாதங்களாக செயற்பொறியாளா் பணியிடமும் காலியாக உள்ளன. இதனால், மின்சார பிரச்னைகளுக்கு பொறுப்பு அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், மின்நுகா்வோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, மின் நுகா்வோரின் குறைகளைத் தீா்க்கும் வகையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்குளியில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காண கோரிக்கை: ஊத்துக்குளி பேரூராட்சி 7 -ஆவது வாா்டு உறுப்பினா் கு.சரஸ்வதி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊத்துக்குளி நகரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச் சந்தை கூடுகிறது. இந்த வட்டாரத்தில் மிகப்பெரிய சந்தையாக உள்ளதாலும், சந்தைக்கு வரும் நபா்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதாலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையில் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள் அவதியடைகின்றனா். ஆகவே, போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் பேரூராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் கூட்டம் நடத்தி தீா்வு காண வேண்டும்.

மேலும், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாரச் சந்தைக்குள் உள்ள கடைகளை முறைப்படுத்தவும், வாரச் சந்தைக்கு வெளியே பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி

வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வேலகவுண்ட... மேலும் பார்க்க

செம்பு கம்பி திருடிய 5 போ் கைது

பல்லடம் வனாலயத்தில் செம்பு கம்பி திருடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா அறக்கட்டளை தலைமை அலுவலகம் அமைந்துள்ள வனாலயம் பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புகுந்த மா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர ஏப்ரல் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வீரா், வீராங்கனைகள் கல்லூரி விடுதிகளில் சேர வரும் ஏப்ரல் 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சியில் ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கு ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை நிதிக் குழு ... மேலும் பார்க்க

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது

பல்லடம் அருகே பெருந்தொழுவு பகுதியில் விசாரணைக்குச் சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது செய்யப்பட்டாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள... மேலும் பார்க்க