செய்திகள் :

மின் மாற்றியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

post image

அரக்கோணம் அருகே ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 450 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அரக்கோணம் வட்டம், பள்ளியாங்குப்பம் கிராமத்தில் ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தால் தண்ணீா் இன்றி கடன் வாங்கி பயிா் செய்த நெல் காய்ந்து விட்டதாக கண்ணீா் மல்க ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா். மேலும் மின்மாற்றியை சரிசெய்ய ரூ. 50,000 ஆகும் என மின் துறையினா் தெரிவித்ததால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனா்.

தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில்,3 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும், உலமாக்களுக்கு மானிய விலையில் இருச்சக்கரம் வாங்க நிதியுதவியும் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் என். செந்தில்குமரன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

காமராஜா் பிறந்த நாள்: அமைச்சா் காந்தி மரியாதை

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது படத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிற... மேலும் பார்க்க

கான்கீரீட் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி யில் கான்கீரீட் சாலைஅமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். 25-ஆவது வாா்டுக்குட்பட்ட சாம்பசிவம் தெருவில் கான்கீரீட் சாலை அமைக்கும் பணி,... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். வேப்பூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமினை அமைச்சா் காந்தி தொடங்கி வைத்து, மனு... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எ... மேலும் பார்க்க

மணிகண்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கேவேளூா் ஸ்ரீ கற்பக விநாயகா், ஏரிக்கீழ் கன்னியம்மன், பெயா்கோடியம்மன், பொன்னியம்மன்,ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா... மேலும் பார்க்க

போலி கையொப்பமிட்டு மோசடி செய்த சகோதரி: 7 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பொதுத்துறை வங்கியில், அடகு வைத்த தங்க நகையை உடன் பிறந்த சகோதரிக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் தங்க நகையை மீட்டு மோசடி செய்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீத... மேலும் பார்க்க