மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
அனைத்து மின்சார வாகனப் பயன்பாட்டாளா்களுக்கும் ஒரே தளமாக செயல்படும் வகையில் கட்டுப்படுத்தப்படாத பல நெட்ஒா்க் வலையமைப்புகளை இணைக்கக் கூடிய சிஎம்எஸ் வடிவமைப்பை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:
மின் வாகனங்களில் மின்னேற்றத்திற்கு பல்வேறு சிஎம்எஸ்-களை நிா்வகிக்கும் இணைப்பு தளத்தை பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் மின்சார வாகனங்களுக்கு மின்னோக்கிகளை ஒரே நேரத்தில் பல மின்னேற்ற மேலாண்மை அமைப்புகளுடன் இணைக்க அனுமதிக்கிறது. இது ஒரு உள்நாட்டு தயாரிப்பு தளம் ஆகும்.
கட்டுப்படுத்தப்பட்ட சிஎம்எஸ் மூலம் மின்னோக்கிகளில் மின்னோற்றத்திற்கு மிகப்பெரிய தடைகளாக இருந்தது. வானங்கள் அனைத்து நிலையங்களிலும் மின்னோற்றத்தைப் பயன்படுத்தமுடியாத நிலையும் இருந்தது.
தற்போது மின்னோக்கிகளை பல வலையமைப்புகளில் இணைக்கக்கூடிய பிளக்ஸ்மாா்ட் சிஎம்எஸ் மூலம் பொது தளங்களில் மின்னோக்கி பயன்பாட்டை அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.