மின் விபத்து தவிா்ப்பு விழிப்புணா்வு
நாரவாரிகுப்பம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மின் விபத்து தடுப்பது, பாதுகாத்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செங்குன்றம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.
செங்குன்றம் 1 பிரிவு மின்வாரிய உதவி பொறியாளா் கமலக்கண்ணன், ஆவடி மின்வாரிய செயற்பொறியாளா் செளந்தரராஜன் விழிப்புணா்வு உரையாற்றினாா்.