செய்திகள் :

மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோதனை!

post image

ஹிமாசல பிரதேசத்தில் சிம்லா, சிர்மாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் நீதிமன்றங்கள் மற்றும் சோலனிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தின் உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சிம்லா, சிர்மாவூர், கின்னாவூர், குல்லு, சம்பா உள்ளிட்ட மாவட்டங்களின் நீதிமன்றங்கள் மற்றும் சோலன் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கூடம் ஆகிய இடங்களுக்கு ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மிரட்டல் மின்னஞ்சல்களை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர்.

அந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை, என காவல் துறையினர் இன்று (ஜூலை 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையில் ஒரே விதமான வாக்கியங்களுடன் வந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் பெயரால் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால், அந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய அடையாளம் தெரியாத மர்ம நபர்களை பிடிக்க அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பெயரில் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு நேற்று (ஜூலை 8) வந்த போலியான வெடிகுண்டு மிரட்டலானது அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Bomb threats have been made against courts in 7 districts of Himachal Pradesh, including Shimla and Sirmaur, and a prominent educational institution in Solan.

இதையும் படிக்க: பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க