செய்திகள் :

'மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை...' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்

post image

மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.ஜ.க, மாநிலத் தலைவரைத் தேசியத் தலைமை மூலம் அறிவிக்கும். மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார்.

மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவர் தேசியத் தலைமையால் இறுதி செய்யப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அடுத்த தலைவர் இவர்தான் என்று தமிழக பா.ஜ.க-விலுள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் யூகங்களைப் பரப்பி வருகிறார்கள்.

போஸ்டர்
போஸ்டர்

இந்நிலையில் மதுரை பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், 'பிரேக்கிங் நியூஸ், பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகம்; பொதுமக்கள் வரவேற்பு., மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை  நியமிக்கப்பட்டுள்ளார். வழி முழுவதும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு' என்று மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்டன. அதே நேரம் பா.ஜ.க-விலுள்ள பல்வேறு கோஷ்டிகளின் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போஸ்டர்கள் பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநில நிர்வாகிகளான செந்தில்குமார் மற்றும் விஷ்ணு பிரசாத் ஆகியோரால் ஒட்டப்பட்டுள்ளன. தேசியத் தலைமை முறைப்படி அறிவிக்கும் முன் எப்படி இதுபோன்று போஸ்டர் போடலாம் என்று எதிர்க் கோஷ்டியினர் தேசியத் தலைமைக்கே புகாரை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இரட்டிப்பு - தேர்தலைக் குறிவைத்து திமுக அரசின் பலே பிளான்?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான விடுமுறை தினங்களை அதிகப்படுத்தி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை தற்போது திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு... மேலும் பார்க்க

``கொஞ்ச நஞ்சம் பேச்சா; திரள்நிதியை திருடிய உனக்கே..." - வருண்குமார் ஐ.பி.எஸ் பதிவு

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.முன்னதாக, சென்னையில் முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணை... மேலும் பார்க்க

BJP: வெளியான மாவட்டத் தலைவர்கள் பட்டியல்; கொதிக்கும் சீனியர்கள்; சர்ச்சையில் தமிழக பாஜக!

கடந்த நவம்பரில் தமிழக பா.ஜ.கவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதலில் கிளை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. மு... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம்.." - வழக்கை CBI-க்கு மாற்ற திருமாவளவன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. சம்பவம் நடந்து கிட்டதட்ட ... மேலும் பார்க்க

"Seemanக்கு கட்சி நடத்தும் தகுதியில்ல" - NTKவில் இருந்து விலகியவர்கள் ஆவேசம்

சீமான் மீது அதிருப்தியிலிருந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் இன்று தி.மு.க-வில் இணைந்தனர். கட்சியிலிருந்து விலகியது ஏன் என தி.மு.க-வில் இணைந்தவர்கள் கூறும் கருத்துகள் இங்கே. மேலும் பார்க்க