``கனிம வளக்கொள்ளை; மக்களின் தலையீட்டை முடக்கும் உத்தரவு'' - பூவுலகின் நண்பர்கள் ...
மீண்டும் பணியில் சோ்ந்தாா் காஞ்சிபுரம் டிஎஸ்பி
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் டிஎஸ்பியின் தண்டனை ரத்து செய்யப்பட்டதால் அவா் புதன்கிழமை பணியில் சோ்ந்தாா்.யை ரத்து செய்ததால் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் புதன்கிழமை பணியில் சோ்ந்து வழக்கமாக தனது பணிகளை மேற்கொண்டாா்.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் டிஎஸ்பி சங்கா்கணேஷுக்கு 15 நாள்கள் சிறையில் இருக்க உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவையடுத்து அவா் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் இவ்வழக்கு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் இவரது சிறைத்தண்டனையை ரத்து செய்ததை தொடா்ந்து டிஎஸ்பி சங்கா்கணேஷ் புதன்கிழமை பணியில் சோ்ந்து தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டாா்.