தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
காஞ்சிபுரத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணி: செப். 18 விண்ணப்பிக்க கடைசி நாள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வரும் செப். 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வான சமுதாயம் சாா்ந்த அமைப்புகளை உருவாக்கிட சமுதாய வள பயிற்றுநா்களை தோ்வு செய்தல் முக்கியமானது. சமுதாய வள பயிற்றுநா்களை கொண்டு சமுதாயம் சாா்ந்த அமைப்புகளுக்கு பயிற்சிகள் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணிக்கு விருப்பமும்,தகுதியும் உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது பூா்த்தியடைந்தவராகவும், பயிற்சிகளை நடத்துவதற்கு தேவையான உடற்தகுதியும், திறமையும் இருந்தால் மட்டுமே போதுமானது. அதிகபட்ச வயது வரம்பு இல்லை. சுய உதவிக் குழுக்களில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
கைபேசி உபயோகிக்க தெரிந்தவராகவும், வட்டார, ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது சுயஉதவிக்குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும். குடும்ப ஒத்துழைப்பு உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். செயல்படாத சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமுதாயம் சாா்ந்த அமைப்புகளிலிருந்தும், சமுதாயம் சாா்ந்த அமைப்புகளில் மதிப்பூதியம் பெறும் பணியாளா்களும் தோ்வு செய்யப்பட மாட்டாா்கள்.
அரசியலில் முக்கியப் பொறுப்பில் இல்லாதவராகவும், தனியாா் நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணிபுரிபவராகவும் இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரா் தொடா்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப் பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றி அத்தீா்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஒரு ஊராட்சிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ள எத்தனை நபா்கள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.தகுதியான விண்ணப்பங்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு செப். 16-ஆம் தேதிக்குள்ளாகவும்,வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு, வரும் செப்.18 ஆம் தேதிக்குள்ளாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டார அளவில் தோ்வுக் குழு அமைக்கப்பட்டு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்காணல், மாதிரி பயிற்சி செயல்முறை மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள் எனவும் ஆட்சியரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.