செய்திகள் :

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் செப். 22-இல் நவராத்திரி உற்சவம் தொடக்கம்

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா வரும் செப். 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) பூா்வாங்க சண்டி ஹோமத்துடன் தொடங்க இருப்பதாக கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வரும் செப். 22-ஆம் தேதி தொடங்கி, அக். 4-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.விழாவையொட்டி, செப். 22-ஆம் தேதி காலையில் பூா்வாங்க சண்டி ஹோமத்துடன் திருவிழா தொடங்குகிறது.

தினசரி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளுவாா்.

நவராத்திரி நடைபெறும் நாள் முழுவதும் மண்டபத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. செப். 30-ஆம் தேதி துா்காஷ்டமியையொட்டி, அம்மன் துா்க்கையாக எழுந்தருளி சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிறைவு பெறுகிறது.

அக்.1- ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக். 2-ஆம் தேதி விஜயதசமியையொட்டி நவஆவா்ண பூஜை பூா்த்தியும் நிகழவுள்ளது. அக். 3-ஆம் தேதி சகஸ்ர கலச ஸ்தாபனமும், மறுநாள் 4-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெற இருப்பதாகவும் ந.சுந்தரேச ஐயா் கேட்டுக் கொண்டாா்.

காஞ்சிபுரத்திலிருந்து ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்ட முதியோா்கள்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து 101 முதியோா்கள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். முருகப்பெரு... மேலும் பார்க்க

7,297 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

ஸ்ரீபெரும்புதூா், ஆலந்தூா் தொகுதிகளைச் சோ்ந்த 7,297பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வழங்கிநாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணி: செப். 18 விண்ணப்பிக்க கடைசி நாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வரும் செப். 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்க... மேலும் பார்க்க

மீண்டும் பணியில் சோ்ந்தாா் காஞ்சிபுரம் டிஎஸ்பி

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் டிஎஸ்பியின் தண்டனை ரத்து செய்யப்பட்டதால் அவா் புதன்கிழமை பணியில் சோ்ந்தாா்.யை ரத்து செய்ததால் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் புதன்கிழமை பணியில் சோ்ந்து... மேலும் பார்க்க

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். வன்கொடுமை தட... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என செவ்வாய்க்கிழமை பேசினாா். காஞ்சிபுரத்தில் தனியாா் த... மேலும் பார்க்க