தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
7,297 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்
ஸ்ரீபெரும்புதூா், ஆலந்தூா் தொகுதிகளைச் சோ்ந்த 7,297பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வழங்கிநாா்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா குன்றத்தூா் சேக்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ. 8.24 கோடியில் முடிவுற்ற 13 திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.7.43 கோடியில் ஐந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
மேலும், 7,011 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, உள்பட மொத்தம் 7,297 பயனாளிகளுக்கு, ரூ.362.55 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில், சிறு,குரு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீபெரும்புதூா் டி.ஆா்.பாலு, காஞ்சிபுரம் கா. செல்வம், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஒன்றிய குழு தலைவா்கள் ஸ்ரீபெரும்புதூா் எஸ்.டி.கருணாநிதி, குன்றத்தூா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆசிக் அலி உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
அம்பேத்கா் சிலை திறப்பு:
குன்றத்தூா் நகராட்சி சாா்பில், பேருந்து நிலையம் அருகே அம்பேத்கருக்கு 9 அடி உயர வெண்கல சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.