செய்திகள் :

மீண்டும் வில்லன்! கிரைம் திரில்லராக உருவாகும் மம்மூட்டியின் களம் காவல்!

post image

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம் காவல் படம் குறித்து இயக்குநர் பேசியுள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படமாக களம் காவல் என்கிற படத்தை தயாரித்து வருகிறது. துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனும் வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஜித்தின், “களம் காவல் திரைப்படம் கிரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளது. வழக்கம்போல, நடிகர் மம்மூட்டி வித்தியாமான கதாபாத்திரங்களில் நடிப்பதை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

புழு, பிரம்மயுகம், ரோர்சாக் உள்ளிட்ட படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த மம்மூட்டி மீண்டும் வில்லனாக நடித்துள்ளது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: அட்லி படத்தில் 4 தோற்றங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?

actor mammooty acts a villain role in kalamkaval a crime thriller movie directed by jithin k jose.

வருங்கால கணவரை அறிவித்தார் நடிகை ரித்விகா!

நடிகை ரித்விகா தனது வருங்கால கணவர் யார் என்பது குறித்து அறிவித்துள்ளார். அவருடன் திருமணம் நிச்சயமான புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்ற... மேலும் பார்க்க

வெற்றி மாறன் படத்திற்காக உடல் எடையைக் குறைத்த சிம்பு!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறனின் படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளார்.இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்... மேலும் பார்க்க

மாரீசன் டிரைலர் அப்டேட்!

நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற ப... மேலும் பார்க்க

தலைவன் தலைவி கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.சத்யஜோதி ஃபில... மேலும் பார்க்க

சட்டமும் நீதியும் இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி!

நடிகர் சரவணன் நடிப்பில் உருவான சட்டமும் நீதியும் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நாயகனாக வெற்றிப் பெற்ற நடிகர்களில் கவனிக்கப்பட்ட சரவணன், பருத்தி வீரன் படம் மூல... மேலும் பார்க்க

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்: வரலாற்று வெற்றியை ருசித்த போலந்து மகளிரணி!

போலந்து கால்பந்து மகளிரணி முதல்முறையாக ஐரோப்பிய சாம்பியனில் வென்று வரலாறு படைத்துள்ளது. போலந்து மகளிரணி ஐரோப்பிய சாம்பியன் குரூப் ஸ்டேஜ் போட்டியில் டென்மார் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 3-2 என ... மேலும் பார்க்க