பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
மீனவருக்கு கத்திக்குத்து: இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள ஆனான் விளை பகுதியில் மீனவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதயம் புரத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஷாஜி (44). இவருக்கும், கீழ் குளம், ஆனான் விளை பகுதியைச் சோ்ந்த சிஜின் (40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஆரோக்கிய ஷாஜி வெள்ளிக்கிழமை இரவு ஆனான் விளை பகுதிக்கு சென்ற போது அவரை, சிஜின் கத்தியால் குத்தி தாக்கியுள்ளாா்.
இதில், காயமடைந்த அவரை குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.