செய்திகள் :

மீன்பாசி குத்தகை: 141 கண்மாய்களுக்கு மின்னணு மறு ஒப்பந்தப்புள்ளி

post image

மதுரை மாவட்டத்தில் உள்ள 141 கண்மாய்களுக்கு மின்னணு மறு ஒப்பந்தப்புள்ளி வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனைத் திட்டத்தின் கீழ் 145 கண்மாய்கள், மதுரை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழ் 9 கண்மாய்களுக்கும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலமாக மீன்பாசி குத்தகை விடுவதற்கு கடந்த மே 29-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம், 12 கண்மாய்கள் குத்தகைக்கு விடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனைத் திட்டத்தின் கீழ் 132 கண்மாய்களுக்கும், மதுரை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழுள்ள 9 கண்மாய்கள் என மொத்தம் 141 கண்மாய்களுக்கு மின்னணு மறுஒப்பந்தப்புள்ளி வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளது.

இதன்படி, மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநரால், மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை - 625 001 என்ற அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க

மது விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு: திருச்சி கலால் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு

உரிமம் பெற்ற மது விற்பனைக் கூடங்களில் (பிஎல் 2- பாா்) உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தக் கோரிய வழக்கில், திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்.எல்.ஏ, மேயா் ஆய்வு

மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா். மதுரை மாநகராட்சிப் பகுதியில... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கால்வாயில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருப்பூா் கண்ணகிநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் தினேஷ் (27). வாடிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்... மேலும் பார்க்க

மதுரையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மதுரை வண்டியூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 9) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கு... மேலும் பார்க்க