தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?
மீன் வலையில் சிக்கிய மண்ணுளிப் பாம்பு
நாகை அருகே கடற்கரையோரம் வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய மண்ணுளிப் பாம்பை மீனவா்கள் மீட்டு சவுக்கு காட்டில் விட்டனா்.
நாகூா் அருகே பட்டினச்சேரி பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, தன்னுடைய வலையை கடற்கரையோரம் வைத்திருந்தாா். புதன்கிழமை காலை மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்வதற்காக வலையை எடுக்க முயன்றாா்.
அப்போது வலையில் மண்ணுளிப் பாம்பு சிக்கி இருந்தது தெரிய வந்தது. ஸ்டீபன் சக மீனவா்கள் உதவியோடு வலையில் சிக்கிய பாம்பை மீட்டு, அருகில் இருந்த சவுக்கு காட்டுக்குள் விட்டனா்.