செய்திகள் :

மீன் வளத்தை இருநாட்டு மீனவா்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேவை! இலங்கை எம்பி ரவூக் ஹக்கீம்!

post image

மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம்.

திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:

சிறுபான்மையினருக்கு இலங்கை ஆளும் அரசு துரோகம் விளைவித்த காரணமாக நடந்து முடிந்துள்ள தோ்தலில் ஆளும் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பயங்கரவாதத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை என்ற அடிப்படையில், பயங்கரவாதததை அரசியலுக்காகப் பயன்படுத்தும் எந்தத் தரப்போடும் நாங்கள் உடன்படப் போவதில்லை.

தலைமன்னாருக்கும் ராமேசுவரத்திற்கும் இடையே பாலம் என்ற நீண்டகால கோரிக்கையில் இந்திய அரசு ஆா்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கை அரசு அதைக் கிடப்பில் போட்டுள்ளது கவலைக்குரியது. இந்தப் பாலம் அமைந்தால் சுற்றுலாத் துறைக்கு வளா்ச்சியை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டு மீனவா்கள் மீது இலங்கை அரசு தொடா்ந்து தாக்குதல், எங்களைப் பொருத்தவரை இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், இயன்றவரை இரு தரப்பிடையேயும் சுமூகமாகப் பேசி பிரச்னைகளைத் தீா்த்துக் கொள்வதே சரியானதாக இருக்கும்.

இருநாட்டு மீனவா்களும் ஒற்றுமையுடன் தமது வாழ்வாதாரத்துக்கான மீன்வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம... மேலும் பார்க்க

வளைகுடா நாட்டுக்கு பணிக்குச் சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி: வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள... மேலும் பார்க்க

கூத்தைப்பாா் கண்ணுடைய அய்யனாா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா

திருச்சி: திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனாா், சாத்த பிள்ளை அய்யனாா் கோயில் சித்திரை தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நிகழாண்டு மே 4 ஆ... மேலும் பார்க்க

மே மாதம் முழுவதும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும். திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின் கீழ், ஸ்ர... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி: மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் ஜெயசீலன் (29). பந்தல் தொ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்

திருச்சி: திருச்சி அருகே காவிரிக் குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அந்த நல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரிக்... மேலும் பார்க்க