மீரான்குளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் தேசிய தர ஆய்வு
சாத்தான்குளம் சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட மீரான்குளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் தேசிய தர ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய தர ஆய்வு மருத்துவா்கள் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்று ஆய்வை மேற்கொண்டனா்.
வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன், சாலைப்புதூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தேன்மொழி, ஆய்வுக்கான ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் நவீன்குமாா், மாவட்ட சுகாதார அலுவலக மருத்துவா் லட்சுமி, செவிலியா்கள் செல்வராணி, சுபா வள்ளி, நாகவள்ளி, மகேஸ்வரி, சுப்புலட்சுமி, பெரில் மேரி, சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், அஸ்வின், ஊழியா்கள், ஆஷா பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.