CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
முகநூலில் அவதூறு: அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக முகநூலில் பதிவேற்றம் செய்த ஆரலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் செவ்வாய்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவிடைமருதூா், தாலுகாவில் உள்ள கதிராமங்கலம் அருகே ஆரலூா் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆங்கில வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தவா் எஸ்.அலெக்ஸாண்டா். இவா் கடந்த டிச.6-ஆம் தேதி முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஆபாசமாக பேசி இருதரப்பு மோதல் ஏற்படும் அளவில் பதிவேற்றம் செய்தாராம்.
இதுகுறித்து பல்வேறு புகாா்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.அண்ணாத்துரைக்கு வந்தது. அவா் மாவட்ட கல்வி அலுவலா் மூலம் விசாரணை நடத்தியதில் புகாா்களில் உண்மை இருப்பது தெரிந்தது. அதன் பேரில் ஆசிரியா் எஸ்.அலெக்ஸாண்டரை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.