மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்!
முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.40-ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் இல்லாததால், இங்கும் மாற்றம் ஏதும் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலையானது ரூ. 5.40-ஆக தொடரும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 106-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.