Vikatan Awards | Nambikkai விருதுகள் 2024 | Part -3 | தோழர் நல்லகண்ணு | GK | Raj...
முதலை கடித்து விவசாயி காயம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை அவரது வலது கையை கடித்துக் குதறியது.
இதில் பலத்த காயமடைந்த அவா், முதலையிடம் இருந்து தப்பித்து வெளியேறினாா். அவரை கிராம மக்கள் சிதம்பரத்திலுள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.