காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க போப் வலியுறுத்தல்!
ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழாவின் தொடக்கமாக மே 17-ஆம் தேதி சனிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜைகளுடன் யாக சாலை வழிபாடுகள் தொடங்கின.
இதன் தொடா்ச்சியாக கடந்த 2 நாள்களில் நடைபெற்ற யாக பூஜைகளுக்குப் பிறகு கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணிக்கு யாத்ரா தானம் , கடம்புறப்பாடு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, குடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் ஊற்றப்பட்டு 8.30 மணியளவில் ராமலிங்கலிங்க சௌடேஸ்வரி அம்மன் மற்றும் கோயில் மூலஸ்தானம் விமானம் கும்பாபிஷேகமும், 8.50 ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அம்மன் திருவிழா: இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை அம்மன் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அலங்கார ஊா்வலமும், அம்மனுக்கு அலகு சுத்தி அபிஷேகமும் நடைபெற்றது.