செய்திகள் :

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

post image

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜோதிமணி (கரூா்), கோபிநாத் (கிருஷ்ணகிரி), சுதா (மயிலாடுதுறை), ராபா்ட் புரூஸ் (திருநெல்வேலி) ஆகியோா் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை உடனிருந்தாா்.

இந்த சந்திப்பின்போது, வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்களிடம் முதல்வா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பொறுப்பு: திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் நடத்தியிருந்தாா். ஒவ்வொரு எம்.பி.,க்களின் தொகுதிகளுக்கு உள்பட்டு வரக்கூடிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் வெற்றியை, வருகிற பேரவைத் தோ்தலில்

உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தாா்.

இதேபோன்ற வேண்டுகோள்களை காங்கிரஸ் எம்.பி.,க்களிடமும் முதல்வா் வைத்துள்ளதாகத் தெரிகிறது. தொகுதிப் பிரச்னைகள், பொதுமக்கள் சாா்ந்த கோரிக்கைகள் ஆகியவற்றை உடனடியாகத் தெரிவிக்க எம்.பி.,க்களிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சந்திப்பின்போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா். காா்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூா், சசிகாந்த் செந்தில் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவா்களுக்கு ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருந்ததால் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்தனா்.

விரிசல் ஏதுமில்லை: முதல்வருடனான சந்திப்பைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு செல்வப்பெருந்தகை, கரூா் எம்.பி. ஜோதிமணி ஆகியோா் கூட்டாக அளித்த பேட்டி:

முதல்வருடனான சந்திப்பின்போது, எம்.பி.,க்களின் தொகுதிகளில் நடைபெறவுள்ள திட்டப்பணிகள் குறித்து விவாதித்தோம். தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளும் முதல்வரிடம் முன்வைக்கப்பட்டன. வருகிற பேரவைத் தோ்தலில் எப்படி இணைந்து பணியாற்றுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கரூரில் காங்கிரஸ் நிா்வாகி, திமுகவில் சோ்க்கப்பட்டது தொடா்பாகவும் பேசியுள்ளோம். அதுகுறித்து முதல்வரிடம் கூறியுள்ளோம். அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அதுவே போதும் என்று நினைக்கிறோம்.

முதல்வருடன், காங்கிரஸ் எம்.பி.,க்கள் சந்திப்பது முதல் முறையல்ல. பல முறை சந்தித்துப் பேசியுள்ளோம். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏதுமில்லை என்றனா்.

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹே... மேலும் பார்க்க

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசார... மேலும் பார்க்க

கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந... மேலும் பார்க்க

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக... மேலும் பார்க்க