முதல்வர் வேட்பாளர் விஜய்: தவெக தீர்மானம்!
2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்தில் கட்சியின் பணிகள், முதல்வர் வேட்பாளர் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவெக தலைமையில்தான் கூட்டணி, கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
முன்னதாக தவெக தலைவர் விஜய், வருகிற செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார், முன்னதாக ஆகஸ்ட் மாதம் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக 2-வது மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
TVK Executive Committee meeting resolution is CM candidate Vijay In 2026 election.
செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்! ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு!