செய்திகள் :

முதல்வா் கோப்பை கபடிப் போட்டிகள்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதாசன் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைப்பாளா் கே.எஸ்.நாராயணன் போட்டியைத் தொடங்கி வைத்தாா். ஆண்கள் பிரிவில் 67 அணிகளும், பெண்கள் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் தெக்கூா் விசாலாட்சி கலாசாலை அணி முதலிடம், கல்லல் முருகப்பா அணி 2 -ஆம் இடம், சிவகங்கை விளையாட்டுப் பள்ளி 3 -ஆம் இடம் பிடித்தன.

பெண்கள் பிரிவில் கொல்லங்குடி அரசுப் பள்ளி முதலிடம், திருப்பத்தூா் நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 2-ஆம் இடம், இடையமேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி 3 -ஆம் இடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் உடல்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். புரோ கபடி நடுவா் சிவநேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஜிம்கண்ணன், ஹரி, பள்ளி ஆசிரியா்கள் செந்தில்குமாா், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளிய... மேலும் பார்க்க

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன். சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிங்கம்... மேலும் பார்க்க

தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேவகோட்டை நகா் சிவன் கோயிலில் ஆவணி மாத... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப்.12 -க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில், மாவட்ட அளவிலான சோ்க்கை , முன் விண்ணப்பமில்லா நேரடிச் சோ்க்கைக்கு தகுதியானவா்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் விண்ண... மேலும் பார்க்க

தியாக வினோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் கலசங்களில் புனிதநீா் நிரப்பி யாக பூஜைகள் ந... மேலும் பார்க்க