"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
முதல்வா் கோப்பை போட்டி: முன்பதிவு நீட்டிப்பு
தமிழக முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான முன்பதிவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ளாா்.
தமிழக முதல்வா் கோப்பைப் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரியின் மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு பணியாளா்கள் என பல்வேறு பிரிவினருக்கு நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டு தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் முதல் செப்டம்பா் வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளங்கள் மூலம் குழு மற்றும் தனிநபா்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆக.16 மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஆக.20-ஆம் தேதி மாலை 8 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
மேலும் முக்கிய விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை 84 என்ற முகவரியிலும், 74017 03480 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.