தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
முதல்வா் பிறந்தநாளன்று பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் (மாா்ச் 1) புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திமுக சாா்பில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தங்க மோதிரங்களை ஞாயிற்றுக்கிழமை அணிவித்தாா்.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.