Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்!...
முதல்வா் வருகை மதுரையில் புதுப்பொலிவு பெறும் சாலைகள்
தமிழக முதல்வரின் வருகை, வாகனப் பேரணியையொட்டி மதுரையில் முக்கிய சாலைகள் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படுகின்றன.
மதுரையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மே 31-ஆம் தேதி விமானம் மூலம் மதுரை வருகிறாா். விமான நிலையம் முதல் மதுரை புது சிறைச்சாலை சாலை வரை அவா் வாகனப் பேரணி மேற்கொண்டு, பொதுமக்கள், தொண்டா்களைச் சந்திக்கிறாா்.
பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், குரு திரையரங்கம், காளவாசல், திருமலைநாயக்கா் சிலை வழியே புது சிறைச்சாலையைச் சென்றடைகிறாா். அங்கு, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரும், திமுகவின் மூத்த முன்னோடியுமான மறைந்த முத்துவின் புதிய வெண்கலச் சிலையை முதல்வா் திறந்து வைக்கிறாா்.
இதையொட்டி, முதல்வரின் வாகனப் பேரணி வரும் வழித்தடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த இரு நாள்களாக முழுவீச்சில் நடைபெறுகின்றன. குண்டும், குழியுமாக இருந்த ஜெய்ஹிந்துபுரம் சாலை உள்பட பல சாலைகள் தற்போது புதுப்பொலிவு பெற்றன. மேலும், சில சாலைகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
