`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், மதுரையில் 11 பணிமனைகள் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நிரந்தரப் பணியிடங்களில் ஒப்பந்த முறை நியமனத்தையும், தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முறையையும் கைவிட வேண்டும், நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வரவு - செலவு வித்தியாசத் தொகை ரூ. 2,700 கோடியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மற்ற அரசுத் துறை ஊழியா்களுக்கும், போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கும் இடையிலான ஆரம்ப நிலை ஊதிய முரண்பாட்டைப் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல தலைமையகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் பொருளாளா் வி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.அழகா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்க பொதுச் செயலா் பி.எம்.அழகா்சாமி நிறைவுரையாற்றினாா்.
போக்குவரத்துத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் திரளாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.