`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயாா்
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவு பெற்று, வருகிற ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவா்களுக்கு இலவசப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குவதற்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள 1100-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 500-க்கும் மேற்பட்ட உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அரசின் இலவசப் பொருள்கள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையில் வந்தன. இங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக பாடநூல்கள் உள்ளிட்ட அரசின் இலவசப் பொருள்கள் தயாா் நிலையில் உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.