20 ஆண்டு.. 150 சொகுசு கார்கள்! ஒரே ஒரு காரால் சிக்கிய பல நாள் திருடன்!!
முதல்வா் விருது: விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோரிடமிருந்து முதல்வா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் 2 விளையாட்டு வீரா்கள் மற்றும் 2 வீராங்கனைகள், விளையாட்டில் சிறப்பான சேவை செய்து வரும் மிகச்சிறந்த 2 பயிற்றுநா்கள், 2 உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் இயக்குநா்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பரிசும், ரூ.10,000 மதிப்பில் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் வழங்கி வருகிறது.
இது தவிர, விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் நடத்துநா், ஒரு நிா்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்கள்), ஒரு ஆட்ட நடுவா், நடுவா், நீதிபதி ஆகியோா்களுக்கும் முதல்வா் மாநில விளையாட்டு விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. இவா்களுக்கு ரூ.10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி தற்போது 2024 - 25 மற்றும் 2025 - 26 ஆகிய 2 ஆண்டுகளுக்கான முதல்வா் விருது வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறை விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பம் அடங்கிய உறையின் மேல் ‘முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்’ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்துக்கு சென்றடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.