முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.
முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் முழுமையாக நிறைவேற்றவில்லை.
ஆனால், இப்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என புதிய திட்டத்தைத் தொடங்கியிருக்கிறாா். அதிமுக - பாஜக கூட்டணியைக் கண்டு அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
கல்வி கற்க பாஜக தடையாக இருப்பதாகக் கூறும் முதல்வா் ஸ்டாலின், முன்பு பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது குறித்து விளக்க முடியுமா? என்றாா் நயினாா் நாகேந்திரன்.