செய்திகள் :

முதல் மாத சம்பளத்தில் தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள் - நெகிழ்ந்த குடும்பத்தினர்!

post image

வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு பெண், தனது முதல் மாத சம்பளத்தை எடுத்து தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார்.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஒரு பெண் தந்தையின் கனவை நினைவாக்கியுள்ளார்.

ரெட்டிட் பதிவில் இதுகுறிது ஒரு பெண் தந்தையின் கனவை எப்படி நிறைவேற்றினார் என்று பகிர்ந்துள்ளார். அதன்படி ஒரு முறை தாஜ் ஹோட்டலை கடந்து சென்ற போது தனது தந்தை அங்கு ஒருபோதும் சென்றதில்லை என்று சாதாரணமாக கூறியதை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

1980 களின் காலத்தில் அவரது பெற்றோர் மும்பையின் தாஜ் ஹோட்டலுக்கு வெளியே நின்று ஒரு புகைப்படம் எடுத்திருந்தனர். ஆனால் அங்கு தங்குவது எப்போதும் அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்ததாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

தான் வேலைக்கு சேர்ந்த பின்பு முதல் மாத சம்பளத்தை ஒரு அர்த்தமுள்ள விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று அந்த பெண் விரும்பி இருக்கிறார். தந்தை சாதாரணமாக கூறிய அந்த வார்த்தையை அவர் நினைவுகூர்ந்து, தாஜ் ஹோட்டலில் ஒரு அறையை முன் பதிவு செய்து தந்தையை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இது மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் தந்தைக்கு கடிதம், பூக்கள், கேக், குடும்பத்துடன் புகைப்படம் என பல விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்கு முன்பு அவரது தாய் சுற்றுலா பயணி ஆக ஹோட்டலுக்கு வெளியே எடுத்த புகைப்படமும் அதில் இடம்பெற்று இருந்தது.

இது வெறும் ஆடம்பர ஹோட்டல் அனுபவமாக இல்லாமல் ஒரு உணர்ச்சிகரமாக அனுபவமாக இருக்கும் என்று இதனை செய்ததாகவும், பெற்றோரின் கனவை இந்த வயதில் நிறைவேற்றி என் தந்தைக்கு இந்த வயதில் மறக்க முடியாத நினைவை வழங்கியது என் வாழ்நாளில் பெரிய பெருமை என்று அந்தப் பெண் நெகிழ்ந்துள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையான மும்பை தாதா அருண்காவ்லி.

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தவர் அருண் காவ்லி. மும்பையில் தற்போது மாபியா கும்பல்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அருண் காவ்லி உட்பட ஒரு சில கிரிமி... மேலும் பார்க்க

சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்த மாணவர்கள் குழு!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கி... மேலும் பார்க்க

`வேலை, திருமண வாழ்வு வேண்டாம்..!' - கப்பலில் வாழ்ந்து வரும் பெண்; வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த லின்னெல் என்பவர் Poverty to Paradise என்ற யூடியூப் சேனலை உருவாக்கி, தான் வாழும் கப்பல் அனுபவங்கள் குறித்து அதில் பதிவிட்டு வருகிறார். 2024 ஆம் ஆண்டில் அவர் பலவிதமான நெருக்கடிகளை சந... மேலும் பார்க்க

”விமானத்தில் ஏறுவதற்கு முன்பு என் சட்டையின்...”- விமான பணியாளர் மீது குற்றம்சாட்டும் பிரபல மாடல்

பிரபல மாடலான ஈவ் கேல், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான பணியாளர் ஒருவர் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈவ் க... மேலும் பார்க்க

Passport: இணையவாசிகளிடையே கவனம் பெறும் நூற்றாண்டு பழைய பிரிட்டிஷ் இந்திய பாஸ்போர்ட்!

விமானத்தில் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்றாக உள்ளது. முன்பெல்லாம் விமான போக்குவரத்து அரிதாக காணப்பட்ட நிலையில், தற்போது உள்நாடு, வெளிநாடு என பலரும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானத்தில் பயண... மேலும் பார்க்க

பல ஆண்டுகள் உழைத்தும் மறுக்கப்பட்ட பதவி; அதே நிறுவனத்தை வாங்கி CEO ஆன பெண்; ஓர் அடடே ஸ்டோரி!

நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த பெண்ணிற்குத் தலைமைப் பொறுப்பு மறுக்கப்பட்ட பின், அதே நிறுவனத்தை வாங்கி தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்ஜூலியாஸ்டீவர்ட்என்பவர்.ஜூலியாஸ்டீவர்ட்அமெரிக்காவைச் ச... மேலும் பார்க்க