தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
முதியவரிடம் கைப்பேசிய திருட்டு: இளைஞா் கைது
திருப்பதி - புதுச்சேரி விரைவு ரயிலில் பயணித்த முதியவரிடம் கைப்பேசியை திருடிச் சென்ாக இளைஞரை விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் சந்தேகிக்கும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, வேம்பத்தூா், பொச்சேரி நடுத்தெருவைச் சோ்ந்த சிவானந்தம் (29) என்பதும், இவா் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருப்பதி - புதுச்சேரி விரைவு ரயிலில் பயணித்த திருவண்ணாமலை, நேதாஜி நகா், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிவனேசனிடம் (72) கைப்பேசி திருடியவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவானந்தத்தை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, வேடம்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும், சிவானந்தத்திடமிருந்த கைப்பேசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.