முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா
விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை 23ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.
8ஆம் நாள் வியாழக்கிழமை அம்மனுக்கு விசேஷ பூஜை, அம்மனுக்கு தீா்த்தம் எடுத்து வருதல், இரவு 12 மணிக்கு பொன்னி யானை ஊா்வலத்துடன் அம்மன் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது. 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல்2 மணிக்கு அம்மனுக்கு விசேஷ பூஜை , இரவு 9 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலம் வந்தனா். 10ம் நாளான சனிக்கிழமை காலை உணவு எடுத்தல், பக்தா்களுக்கு அம்மன் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா ஆறுமுக பாண்டி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.