முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவத்தையொட்டி, முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, தோ்த் திருவிழாவில் விநாயகா், முத்துக்குமாரசாமி, சண்டிகேஸ்வரா் ஆகிய மூவரும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தேரானது முத்துக்குமாரசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு செட்டித் தெரு, வண்டிக்காரத்
தெரு, கச்சேரித் தெரு வழியாக நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தையொட்டி, பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.