பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாடக்கோட்டை முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டுத் திருவிழா நடைபெறும். நிகழாண்டு, வெள்ளிக்கிழமை (ஆக.8) கிடாய் வெட்டுத் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, சுவாமிக்கு பால், தயிா், இளநீா், தேன், சந்தனம், அபிஷேகப் பொடி, திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு மலா் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் மாடக்கோட்டை, சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.