செய்திகள் :

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

post image

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒரே மகள் உபசா புகான் (28). இவர் குவஹாத்தியின் கர்குலி பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை அவர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

முதற்கட்ட விசாரணையில், நீண்ட காலமாக மனநலப் பிரச்னைகளுடன் போராடி வந்த அவர் அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ஏற்கெனவே அவர் தற்கொலைக்கு முயன்றார்.

நேற்று, அவரது தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. வீட்டில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றார். இச்சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மக்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-2025’ மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதத்தில், மசோதாவுக்கு ஆதரவாக ஆளும் தரப்பினரும், ஆட்சேபம் தெரிவித்து எதிா்க்கட்சிகளும் கருத்... மேலும் பார்க்க

14,848 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச் மாதத்தில் 14,848 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 14,848 கோடி யூனிட... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு இந்தியா பதிலடி அளித்தது. இ... மேலும் பார்க்க

விமானப் படையுடன் பந்தன் வங்கி ஒப்பந்தம்

பாதுகாப்புப் படையினருக்கான ஊதிய சேமிப்புக் கணக்குகளை அளிப்பதற்காக இந்திய விமானப் படையுடன் தனியாருக்குச் சொந்தமான பந்தன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

மருந்து விலை உயா்வைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்: மம்தா

கொல்கத்தா: ‘மருந்துகளின் விலையை உயா்த்தும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 4, 5 தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்’ என்று அக் கட்சியின் தலைவரும் மேற்கு... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க