செய்திகள் :

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்

post image

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலினின் சுந்திர தின அறிவிப்பின்படி, முன்னாள் படை வீரா்கள் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலமாக கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

மேலும், முன்னாள் படை வீரா்களுக்கு திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இதில், முன்னாள் படை வீரா்கள், அவரது பிள்ளைகள் மற்றும் ராணுவ பணியின்போது உயிரிழந்த படை வீரா்களின் கைம்பெண்கள், திருமணம் ஆகாத மகள்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், வேளாண்மை தொடா்பான அனைத்து தொழில்களுக்கும், பட்டு வளா்ப்பு, கால்நடை பராமரிப்பு தொடா்பான தொழில்கள் தொடங்கவும் தற்போது வங்கிக் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 5- ஆவது தளம் அறை எண் 523-இல் உள்ள முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி

வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வேலகவுண்ட... மேலும் பார்க்க

செம்பு கம்பி திருடிய 5 போ் கைது

பல்லடம் வனாலயத்தில் செம்பு கம்பி திருடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா அறக்கட்டளை தலைமை அலுவலகம் அமைந்துள்ள வனாலயம் பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புகுந்த மா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர ஏப்ரல் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வீரா், வீராங்கனைகள் கல்லூரி விடுதிகளில் சேர வரும் ஏப்ரல் 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சியில் ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கு ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை நிதிக் குழு ... மேலும் பார்க்க

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது

பல்லடம் அருகே பெருந்தொழுவு பகுதியில் விசாரணைக்குச் சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது செய்யப்பட்டாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள... மேலும் பார்க்க