'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்...
முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழு அழைப்பு
தேனி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து தன்னாா்வலா்களாக செயல்பட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது குறித்து தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து சட்ட விழிப்புணா்வு, சமூக நலன், சட்ட உதவி ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தன்னாா்வலா்களாக செயல்படுவதற்கு முன்னாள் படை வீரா்கள் முன் வரலாம். இந்தப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவ வீரா்கள் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை நேரிலோ, தொலைபேசி எண்: 04546-291566 மூலமாகவோ, அந்தந்த வட்ட நீதிமன்றங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவை நேரிலோ தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை தெரிவிக்கலாம்.
மேலும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பட்டியல் வழக்குரைஞராக செயல்படுவதற்கு விருப்பமுள்ள ராணுவ தலைமை சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரா்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவைத் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.