முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
மதுபோதையில் திருமண விழாவின்போது ஏற்பட்ட முன்விரோதத்தால், ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா் மற்ற இருவரைத் தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவின்போது, அங்கு வந்த திருக்கட்டளை சாலையிலுள்ள மேலக்கொல்லையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (36) என்பவருக்கும், திருக்கட்டளைப் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (23) என்பவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திங்கள்கிழமை பிற்பகலில், ரஞ்சித்குமாா் இரு சக்கர வாகனத்தில் மேலக்கொல்லை பகுதியில் வந்தபோது, பிரகாஷ் மற்றும் இருவா், ரஞ்சித்குமாரை தடுத்து நிறுத்தி, அரிவாளால் வெட்டியுள்ளனா்.
இச்சம்பவத்தில் காயமடைந்த அவா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தகவலறிந்து வந்த கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்ட பிரகாஷை கைது செய்து மற்ற இருவரைத் தேடி வருகின்றனா்.