புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெருங்கொண்டான்விடுதி சமுதாயக் கூடம், குன்றாண்டாா்கோவில் ஒன்றியம் வத்தனாக்கோட்டை ஜெயலட்சுமி திருமண மண்டபம், அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி சமுதாயக் கூடம், அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் வேதவள்ளி திருமண மண்டபம், அரிமளம் ஒன்றியம் கும்மங்குடி இசேவை மையக் கட்டடம், பொன்னமராவதி பேரூராட்சி நாட்டுக்கல் பிரதான சாலையிலுள்ள அம்மன் சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.