செய்திகள் :

நிகழாண்டில் 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: புதுகை ஆட்சியா் தகவல்!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டின் காரீப் பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு .அருணா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கான கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் மொத்தம் 45 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 15,218 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 36.78 கோடி நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 20 ஆயிரம் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேகரித்து வைக்க 6 நெல் சேகரிப்பு கிட்டங்கிகள் தயாா்நிலையில் உள்ளன. நுகா்பொருள் வாணிபக் கழதத்தின் மூலம் கட்டப்பட்ட 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை உலா்த்துவதற்கான களங்களும் தயாராக உள்ளன.

கட்டுமானப் பணி முடிவுற்ற 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதலுக்கு தயாராக உள்ளன. 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மழைக்காலத்தில் நெல்லை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கருப்பு பாலித்தீன் கவா்கள், ஷீட்டுகளை வைத்து நெல் அட்டிகளை மூடி வைக்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் எம். சீதாராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா மற்றும் முன்னோடி விவசாயிகளும் பங்கேற்றனா்.

பொன்னமராவதி வட்டாரத்தில் பரவலாக மழை

பொன்னமராவதி வட்டாரத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் சுட்டெரித்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற... மேலும் பார்க்க

அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யக் கூடாது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி எச்சரிக்கைவிடுத்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து குடிநீா் குழாய், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

ஆதனப்பட்டியில் திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனப்பட்டியில் சோழா் காலத்தைச் சோ்ந்த திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூா் வட்டம், மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்பட்ட ஆதனப்பட்டி வ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய ம... மேலும் பார்க்க