திரைத் துறையில் 21 ஆண்டுகள்: `இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை' - நடிகர் விஷ...
கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து குடிநீா் குழாய், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள கே.கே.பட்டியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு அப்பகுதியில் உள்ள 2 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து
குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் உள்ள மின்மோட்டாா் பழுதானதால், மற்றொரு தொட்டியின் மின்மோட்டாரில் இருந்து இரண்டு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீா் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு மற்றொரு மின் மோட்டாரும் பழுதானது.
இதனால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், உடனே குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, குடிநீா் குழாய்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.