செய்திகள் :

மும்பை பங்குச் சந்தை கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

post image

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) கட்டடத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

நாட்டின் நிதித் தலைநகராக அறியப்படும் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக பிஎஸ்இ கட்டடம் திகழ்கிறது. இக்கட்டடத்தில் 4 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, தென் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு அரசியல் தலைவரின் பெயரை குறிப்பிட்டு, பிஎஸ்இ ஊழியா் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் மின்னஞ்சல் வந்தது.

திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து வந்த அந்த மின்னஞ்சல் குறித்து பிஎஸ்இ அதிகாரிகளுக்கு ஊழியா் தகவல் தெரிவித்தாா். பின்னா், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வெடிகுண்டு அகற்றும் நிபுணா்களுடன் வந்த காவல் துறையினா் பிஎஸ்இ கட்டடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதில், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபருக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த 1993-ஆம் ஆண்டில் மும்பை தொடா் குண்டுவெடிப்பு தாக்குதலின்போது, பிஎஸ்இ கட்டடமும் இலக்கானது குறிப்பிடத்தக்கது.

உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!

உத்தரப் பிரதேசத்தின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்டது சம்பவத்தில் 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மன்லால் (22) கொலை செய்ய... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு செல்லவுள்ளது.பிரிட்டன் எப்-35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்... மேலும் பார்க்க

இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!

இறந்தோரின் ஆதார் அட்டைகளும் செயலாக்கத்தில் இருப்பதால், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை!

கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,... மேலும் பார்க்க

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் தந்தையுடன் ராகுல் உரை!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் தளப் பதிவில், ஒடிசாவின் பா... மேலும் பார்க்க